லைஃப்ஸ்டைல்

வயிற்று உபாதையை போக்கும் இஞ்சி சாதம்

Published On 2018-03-21 06:37 GMT   |   Update On 2018-03-21 06:37 GMT
வயிற்று வலி, அஜீரண கோளாறு உள்ளவர்கள் அடிக்கடி இஞ்சி சாதம் செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இன்று இந்த சாதம் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

அரிசி - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பிரிஞ்சி இலை - ஒன்று
பட்டை - ஒரு சிறு துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
புதினா - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 குழிக்கரண்டி

அரைக்க:

இஞ்சி - ஒரு சிறு துண்டு
மிளகாய் வற்றல் - 3
பூண்டு - 5 பல்
பெருஞ்சீரகம் - கால் தேக்கரண்டி
முந்திரி - 5



செய்முறை  :

வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

அரைக்க கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைத்து வைக்கவும்.

தக்காளியைத் தனியாக அரைத்து கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சி இலை, கறுவாப் பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் போட்டு தாளித்த பின்னர் அதனுடன் கொத்தமல்லித் தழை, புதினா மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

அடுத்து அதில் அரைத்த இஞ்சி விழுதைச் சேர்த்து, பச்சை வாசம் போக வதக்கவும்.

அடுத்து கழுவிய அரிசியும், தேவையான அளவு உப்பும் சேர்த்து ஒரு புரட்டு புரட்டி எடுத்து விட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி வழக்கமாக சாதம் சமைப்பது போல் சமைக்கவும்.

சூப்பரான இஞ்சி சாதம் ரெடி.

வறுவல், அப்பளம், தயிர் பச்சடி போன்றவை இந்த இஞ்சி சாதத்திற்கு ஏற்ற துணை உணவுகள்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News