லைஃப்ஸ்டைல்

சூப்பரான மாங்காய் பச்சடி செய்வது எப்படி

Published On 2018-03-20 06:48 GMT   |   Update On 2018-03-20 06:48 GMT
மாங்காய் சீசன் ஆரம்பித்து விட்டது. இந்த சீசனில் கிடைக்கும் மாங்காயை வைத்து இன்று எளிய முறையில் சூப்பரான பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

மாங்காய் - ஒன்று
வெல்லம் - 1/2 கப்
ஏலக்காய் - 5
கடுகு - 3/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி



செய்முறை :

பச்சை மிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

மாங்காயை துருவிக்கொள்ளவும்.

வெல்லத்தையும், ஏலக்காயையும் பொடிச்செய்துக்கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் நறுக்கி வைத்த பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பச்சை மிளகாய் வதங்கியதும் அரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் துருவிய மாங்காய் மற்றும் உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வரை வதக்கவும்.

மாங்காய் வெந்ததும் பொடித்த வெல்லத்தை சேர்த்து கைவிடாமல் கலக்கவும்.

மாங்காயில் வெல்லம் கரையும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.

மாங்காயும், வெல்லமும் ஒன்றாக கலந்தப்பின்னர் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி ஒரு நிமிடம் வரை வைத்திருந்து இறக்கவும்.

சுவையான மாங்காய் பச்சடி தயார்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News