லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கான ரோஸ் புட்டிங்

Published On 2018-03-14 09:35 GMT   |   Update On 2018-03-14 09:35 GMT
குழந்தைகளுக்கு புட்டிங் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ரோஸ் புட்டிங்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பாக்கலாம்.
தேவையான பொருட்கள் :

பால் - 2 கப்,
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்,
ரோஸ் மில்க் சிரப் - 2 டேபிள்ஸ்பூன்,
சைனா கிராஸ் - 3 கிராம்,
தண்ணீர் - 1/4 கப்,
ஸ்ப்ரிங்கிள்ஸ் (Sprinkles) - அலங்கரிக்கத் தேவையான அளவு. 



செய்முறை  :

சைனா கிராஸை பொடியாக நறுக்கவும். தண்ணீரில் இதைப் போட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும். சைனா கிராஸ் நன்றாக கரைய வேண்டும்.

இதற்கிடையில் ஒரு பாத்திரத்தில் பாலை எடுத்து, அதில் ரோஸ் மில்க் சிரப், சர்க்கரை சேர்க்கவும்.

இந்த நேரத்தில் சைனா கிராஸ் முழுவதுமாக கரைந்திருக்கும். இந்த சைனா கிராஸில் பால் கலவையைப் ஊற்றி வேகமாக கைவிடாமல் கலக்கவும்.

பதம் வந்தவுடன் இதை சின்னச் சின்ன கப்புகளில் ஊற்றவும். பிறகு மேலே ஸ்ப்ரிங்கிள்ஸ் (Sprinkles) சேர்த்து 3 மணி நேரம் குளிர வைக்கவும்.

பிறகு ஓரங்களை கத்தியால் கீறி புட்டிங் தனியே வருமாறு எடுக்கவும். குளிரக் குளிர பரிமாறவும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News