லைஃப்ஸ்டைல்

மாலை நேர ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு வடை

Published On 2018-02-28 06:40 GMT   |   Update On 2018-02-28 06:40 GMT
மாலை நேரத்தில் சூடான காபி, டீயுடன் சாப்பிட உருளைக்கிழங்கு வடை சூப்பராக இருக்கும். இன்று இதை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - அரை கிலோ
கடலை மாவு - நான்கு டீஸ்பூன்
இஞ்சி - அரை துண்டு
வெங்காயம் - 2
சீரகம் - ஒன்றை டீஸ்பூன்
கொதம்மல்லி - சிறிதளவு
[பாட்டி மசாலா] மிளகாய் தூள் - ஒன்றை டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

இஞ்சி மற்றும் சீரகம் இரண்டையும் அரைத்து கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் மசித்த உருளைக்கிழங்கு, அரைத்த விழுது, உப்பு, கொதம்மல்லி, வெங்காயம், கடலை மாவு,
[பாட்டி மசாலா] மிளகாய் தூள்
ஆகியவற்றை சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

மாவு சற்று தளர்வாக இருந்தால் கடலை மாவு சேர்த்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வடை போல் தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சூப்பரான உருளைக்கிழங்கு வடை ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News