லைஃப்ஸ்டைல்

கர்நாடக ஸ்டைல் புளிக்கறி

Published On 2017-09-23 07:17 GMT   |   Update On 2017-09-23 07:17 GMT
இந்த கர்நாடக ஸ்டைல் புளிக்கறி என்பது புளிக்கரைசல் ஜூஸையும், வெல்லம் மற்றும் காரசாரமான மசாலா பொருட்கள் சேர்த்து தயாரிக்கும் ரெசிபி ஆகும்.
தேவையான பொருட்கள் :

புளி - 1 லெமன் அளவு
தண்ணீர் - 11/2 கப்
எண்ணெய் - 11/2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் (நறுக்கியது) - 1/4 கப்
கறிவேப்பிலை - சிறிதளவு,
பெருங்காயம் - 1/4 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - 1/2 கப்
உப்பு - தேவைக்கேற்ப
துருவிய தேங்காய் - 1/4 கப்
கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு.



செய்முறை :

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

புளியை நன்றாக கரைத்து தனியாக வைக்கவும்.

புளிக்கரைசலில் பெருங்காயத்தை சேர்த்து கலந்து வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்க்கவும்.

அடுத்து அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கவும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

அடுத்து வெல்லத்தை போட்டு நன்றாக கலக்கவும்.

அடுத்து தேங்காய் துருவல் போட்டு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி மிதமான தீயில் 20 நிமிடங்கள் வைக்க வேண்டும்.

பின்னர் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

சுவையான கர்நாடக ஸ்டைல் புளிக்கறி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News