லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு விருப்பமான கேரமல் ஃபிரை பனானா

Published On 2017-08-31 07:01 GMT   |   Update On 2017-08-31 07:01 GMT
குழந்தைகளுக்கு கேரமல் பிரை பனானா மிகவும் பிடிக்கும். இதை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

மிகவும் பழுக்காத வாழைப்பழம் - 2
மைதா மாவு - அரை கப்
சோள மாவு - கால் கப்
சர்க்கரை - அரை கப்
எள் - சிறிதளவு
எண்ணெய் - பொரிக்க.



செய்முறை :

ஒரு பாத்திரத்தில் மைதாவுடன், சோள மாவு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

வாழைப்பழங்களை தோல் நீக்கி விருப்பம் போல துண்டுகளாக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அதில் நறுக்கிய பழத்துண்டுகளை மாவில் தோய்த்தெடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். நுரைத்து நிறம் மாறும் பதம் வரும் வரை கிளறி கொண்டே இருக்கவும். இவ்வாறு கேரமல் தயார் செய்து கொள்ளவும்.

பொரித்தெடுத்த பழத்துண்டுகளை கேரமல் கலவையில் போட்டு எடுத்து, பரிமாறவும்.

விருப்பப்பட்டால் வறுத்த எள்ளை இதன் மீது தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News