லைஃப்ஸ்டைல்

நெல்லை ஸ்டைல் அவியல் செய்வது எப்படி

Published On 2017-08-06 07:44 GMT   |   Update On 2017-08-06 07:44 GMT
கேரளா ஸ்டைல் அவியல் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று நெல்லையில் செய்யும் முறையில் அவியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

கேரட், பீன்ஸ் அல்லது கொத்தவரை, முருங்கை, கத்திரி, மாங்காய்,சேனை, வெள்ளரி, வாழைக்காய், வெள்ளைப் பூசணி எல்லாம் சேர்த்து - 500 கிராம்

அரைக்க:

தேங்காய் - அரைகப்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2- 3
சீரகம் - 1 டீஸ்பூன்

தாளிக்க:

தேங்காய் எண்ணெய் - ஒரு மேஜைக்கரண்டி
கடுகு, உளுந்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்

அலங்கரிக்க :

கறிவேப்பிலை,
கொத்தமல்லி இலை.

செய்முறை:

அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

காய்கறிகளை ஒரே போல் மெல்லியதாக நீளவாக்கில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதில் காய்கறிகளை போட்டு தேவைக்கு சிறிது உப்பு போட்டு வேக வைக்கவும். தண்ணீர் வற்றி காய் வெந்து வரும் போது அரைத்த தேங்காய் கலவையை சேர்க்கவும். அடுப்பை மீடியமாக வைத்து சிறிது கொதிக்க விட்டு பிரட்டி விடவும்.

கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும். உப்பு சரிபார்த்து இறக்கவும்.

மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து அவியலில் சேர்க்கவும்.

சுவையான நெல்லை அவியல் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News