லைஃப்ஸ்டைல்

கலக்கலான மதிய உணவு வெஜிடபிள் புலாவ்

Published On 2017-08-03 07:46 GMT   |   Update On 2017-08-04 05:43 GMT
பள்ளி, கல்லூரி, அலுவலகத்திற்கு சூப்பரான மதிய உணவு கொண்டு போக நினைத்தால் வெஜிடபிள் புலாவ் செய்யலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி  - 2 கப்
தண்ணீர்  - 4 கப்
வெங்காயம்  -2
பச்சை மிளகாய் - 2
பச்சை பட்டாணி  - 3 டேபிள் ஸ்பூன்
சிறிய கேரட் - 1
பீன்ஸ் - 4
காலிப்ளவர் - 5 துண்டுகள்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
முந்திரி பருப்பு - சிறிதளவு.
பிரிஞ்சி இலை - 1
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு  - தேவையான அளவு .
கொத்தமல்லி தழை  - சிறிதளவு

செய்முறை :

முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைத்துக்கொள்ளவும்.

பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.

காலிப்ளவர், கொத்தமல்லி, கேரட்டை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

பாஸ்மதி அரிசியை கழுவி 15 நிமிடம் ஊறவைக்கவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 3 டேபிள் ஸ்பூன் நெய், 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, முந்திரி பருப்பு போட்டு தாளித்த பின்னர் அரிந்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

இவை எல்லாம் நன்றாக வதங்கியதும் ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப்  தண்ணீர் என்ற விகிதத்தில் நீர் சேர்க்கவும்.
   
தேவையான அளவு உப்பையும் சேர்த்து கொதிக்க விட்டு ஒரு கொதி வந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள கேரட், காலிப்ளவர், பட்டாணி, கொத்தமல்லி தழை சேர்த்து மேலே ஒரு ஸ்பூன் நெய் விட்டு நன்றாக கலந்து மூடி போட்டு வேகவிடவும்.

5 நிமிடத்திற்கு ஒருமுறை அரிசி உடையாமல் நிதானமாக கலந்து விட்டு நீர் சிறிது வற்றியதும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து மூடி போட்டு 10 நிமிடம் அப்படியே வேக விடவும்.

10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு 5 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் கம கம வாசனையுடன் பொல பொலவென  சுவையான  புலாவ்  பரிமாறத்தயார்.

சூப்பரான வெஜிடபிள் புலாவ் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News