லைஃப்ஸ்டைல்

தித்திப்பான பலாச்சுளை இலை அடை

Published On 2017-07-31 07:25 GMT   |   Update On 2017-07-31 07:25 GMT
அனைவருக்கும் பலாப்பழம் மிகவும் பிடிக்கும். இன்று பலாப்பழம், வாழை இலை வைத்து சூப்பரான இலை அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பலாச்சுளைகள் - 20,
வெல்லம் - ஒரு கப்,
அரிசி மாவு - ஒரு கப்,
தேங்காய்த் துருவல் - தேவைக்கேற்ப,
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
வாழை இலை - 5,
நெய் - 5 டீஸ்பூன்.



செய்முறை :

பலாச்சுளையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கி வைத்துள்ள பலாச்சுளைகளை போட்டு நன்றாக வதக்கவும்.

பலாச்சுளை நன்றாக வதங்கியதும் அதில் வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு இதனுடன் ஏலக்காய்த்தூள், அரிசி மாவு சேர்த்துக் கெட்டியாக பிசையவும்.

வாழை இலையில் நெய் தடவி, பிசைந்த மாவில் இருந்து சிறு உருண்டை எடுத்து தட்டி, மேலே தேங்காய்த் துருவல் தூவி, மூடி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்வது வைக்கவும்.

செய்த வைத்தவைகளை இட்லி சட்டியில் வைத்து ஆவியில் வேகவைக்கவும்.

சூப்பரான பலாச்சுளை இலை அடை ரெடி.

குறிப்பு: பரிமாறும் வரை அடை, இலையுடனேயே இருக்க வேண்டும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News