பெண்கள் உலகம்
சூப்பரான சைடிஷ் தயிர் ஆலு மசால்
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு தொட்டு கொள்ள தயிர் ஆலு மசால் சூப்பராக இருக்கும். இன்று இந்த தயிர் ஆலு மசாலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தயிர் - hung curd 200 மி.லி.,
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ,
வெங்காயம் - 2
கொத்தமல்லி, கறிவேப்பிலை - 1/2 கப்,
தக்காளி - 2,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்,
கரம்மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 50 மி.லி.,
உப்பு - தேவைக்கு.
செய்முறை :
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் போட்டு நன்கு வதக்கவும்.
அடுத்து அதில் கரம்மசாலாத்தூள், உருளைக்கிழங்கு, 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு வதக்கவும்.
10 நிமிடம் கழித்து தயிர், கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரியுடன் பரிமாறவும்.
சூப்பரான தயிர் ஆலு மசால் ரெடி.
குறிப்பு: hung curd என்பது தயிரை ஒரு துணியில் கட்டி தொங்கவிட்டு, அதில் இருக்கும் தண்ணீர் எல்லாம் வடிந்து கெட்டியான தயிர் கிடைக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.