லைஃப்ஸ்டைல்

சூப்பரான ஸ்நாக்ஸ் பயத்தம் பருப்பு முறுக்கு

Published On 2017-07-23 07:49 GMT   |   Update On 2017-07-23 07:49 GMT
அரிசி மாவில் செய்யும் முறுக்கை விட பயத்தம் மாவில் செய்யும் சூப்பராகவும், மிருதுவாகவும் இருக்கும். இன்று பயத்தம் பருப்பு முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பச்சரிசி - 2 கப்
பயத்தம் பருப்பு - 1/2 கப்
வெள்ளை எள் - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை :

பச்சரிசியை 2 மணி நேரம் ஊறவைத்துக் கழுவி, நிழலில் அரை மணி நேரம் காய வைத்து, மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து சலித்துக் கொள்ளவும். அல்லது கடைகளில் கிடைக்கும் அரிசி மாவையும் உபயோகிக்கலாம்.

பயத்தம் பருப்பை நன்கு குழைய வேக வைக்கவும்.  

ஒரு பாத்திரத்தில் ஆறிய வெந்த பருப்பு, அரிசி மாவு, எள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து தேவையானால் சிறிது தண்ணீரையும் தெளித்து, மிருதுவாக  முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

முறுக்கு அச்சில் ஒற்றை கண் நட்சத்திர வடிவிலான வில்லையைப் போட்டு, மாவை அதில் போட்டு எண்ணெயில் சிறு சிறு வட்டங்களாக பிழிந்து விடவும்.

முறுக்கை திருப்பி விட்டு நன்றாக வெந்ததும் எடுத்து வைக்கவும்.

சூப்பரான பயத்தம் பருப்பு முறுக்கு ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News