லைஃப்ஸ்டைல்

இட்லிக்கு தொட்டுக்கொள்ள கும்பகோணம் கடப்பா குருமா

Published On 2017-07-22 09:45 GMT   |   Update On 2017-07-22 09:45 GMT
கடப்பா என்பது தஞ்சாவூர் பகுதிகளில் இட்லிக்கு தொட்டுக்கொள்ளும் குருமா போன்ற உணவாகும். இட்லியை சாம்பார் அல்லது சட்னியுடன் சாப்பிடுவதற்கு பதில் கடப்பாவை செய்து ருசிக்கலாம்.
தேவையான பொருட்கள் :

உருளை கிழங்கு - 2 வேக வைத்தது
பச்சை பருப்பு - 3 ஸ்பூன்
காலிபிளவர் துண்டுகள் - சிறிதளவு
கேரட் - 1
தக்காளி - 1
வெங்காயம் - 1
உப்பு - தேவைக்கு

மசாலா அரைக்க :

தேங்காய் துருவல் - 5 ஸ்பூன்
கசகாசா - 1 ஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
சீரகம் - 1 ஸ்பூன்
ஏலக்காய் - 2
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 3

தாளிக்க :


சீரகம் - அரை ஸ்பூன்
கிராம்பு - 4
பட்டை - 1 சிறு துண்டு
எண்ணெய் - தேவைக்கு

செய்முறை :

பச்சை பருப்பு, உருளைக்கிழங்கை தனித்தனியாக வேக வைத்து கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மசாலாவிற்காக கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து தனியே வைத்து கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் தாளித்து அடுத்து கிராம்பு மற்றும் பட்டை, கறிவேப்பிலை போட்டு வதக்கிய பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சிறிது நிறம் மாறியதும் தக்காளி மற்றும் காய்கறிகளை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

அடுத்து வேக வைத்த பருப்பை சேர்த்து 1/2 கப் தண்ணீர் விட்டு சிறிய தீயில் கொதிக்க விடவும்.

காய்கறிகள் வெந்த பிறகு உருளைகிழங்கை கையினால் துண்டுகளாக்கி லேசாக மசித்து சேர்க்கவும்.

அடுத்து அதில் அரைத்த மசாலாவையும், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். உப்பு சரி பார்க்கவும்.

எல்லாம் ஒன்றுபோல் சேர்ந்து வந்ததும் அடுப்பை அணைத்து பரிமாறவும்.

இட்லியை ஒரு தட்டில் எடுத்து அதன் மேல் கடப்பாவை ஊற்றி மிதக்க விட்டு சுவைக்கவும். ஆஹா!... என்ன சுவை!!.. ஆஹாஹா..

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News