லைஃப்ஸ்டைல்

சூப்பரான சைடிஷ் சேப்பங்கிழங்கு வறுவல்

Published On 2017-07-20 09:55 GMT   |   Update On 2017-07-20 09:55 GMT
பருப்பு சாதம், ரசம், தயிர், வெரைட்டி ரைஸ்க்கு சேப்பங்கிழங்கு வறுவல் சூப்பரான சைடிஷ். இன்று இந்த வறுவலை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சேப்பங்கிழங்கு - 300 கிராம்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
பூண்டு தட்டியது - 6
கறிவேப்பிலை - 2 இணுக்கு
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கு சாம்பார் அல்லது குழம்பு மிளகாய்த்தூள் கூட சேர்க்கலாம்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிது.
பூண்டு பிடிக்காதவங்க பெருங்காயத்தூள் சேர்க்கலாம்.

செய்முறை :

முதலில் சேப்பங்கிழங்கை தோல் சீவிக் கொள்ளவும். பின்பு அலசி எடுக்கவும்.

கழுவிய சேப்பங்கிழங்கை வட்டமாகவோ அல்லது நீள் வாக்கில் துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

வெட்டிய சேப்பங்கிழங்கை கொதிக்கும் நீரில் இரண்டு நிமிடம் போட்டு எடுக்கவும். குழையக் கூடாது. அரைவேக்காடாக இருக்க வேண்டும்.

தண்ணீர் வடித்து ஆறியவுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தட்டிய பூண்டு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய சேப்பங்கிழங்கு போட்டு நன்றாக கிளறி மூடி வேக விடவும். 5 நிமிடத்திற்கு ஒரு முறை திறந்து பிரட்டி விட்டு திரும்பவும் சிறிது நேரம் வேக விடவும். மொத்தமாக 15 நிமிடத்திற்குள் சூப்பரான சேப்பங்கிழங்கு வறுவல் தயார்.

சூப்பரான சேப்பங்கிழங்கு வறுவல் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News