பெண்கள் உலகம்

சூப்பரான டிபன் சேமியா வெண் பொங்கல்

Published On 2017-07-15 13:04 IST   |   Update On 2017-07-15 13:05:00 IST
விடுமுறை நாட்களில் சற்று வித்தியாசமான முறையில் ஏதேனும் ஒரு ரெசிபியை ட்ரை செய்து சாப்பிட்ட விரும்பினால் சேமியா பொங்கலை செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் :

சேமியா - 2 கப்
பயத்தம் பருப்பு - 2 கப்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
இஞ்சி - சிறிது
ப.மிளகாய் - 2
முந்திரிப் பருப்பு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத்தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு.



செய்முறை :

* இஞ்சியை துருவிக்கொள்ளவும்.

* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றி காய்ந்ததும், சேமியாவை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

* பயத்தம் பருப்பை முக்கால் பதம் வரை வேக வைக்கவும்.

* பிறகு அதோடு வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து, இரண்டையும் நன்கு குழைய வேக வைக்க வேண்டும்.

* அடுத்து அதனுடன் உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

* அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து நெய் ஊற்றி, மிளகு, சீரகம், இஞ்சி, முந்திரிப்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுத்து, அந்த சேமியா கலவையில் போட்டு, ஒரு முறை கிளறி இறக்க வேண்டும்.

* இப்போது அருமையான சேமியா பொங்கல் ரெடி!!!

* இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News