லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கான சாக்லெட் கார்ன்ஃப்ளேக்ஸ் கேக்

Published On 2017-07-05 09:51 GMT   |   Update On 2017-07-05 09:51 GMT
குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லெட் கார்ன்ஃப்ளேக்ஸ் கேக் செய்வது மிகவும் எளிமையானது. இதை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

குக்கிங் சாக்லெட் - 1 கப்,
கார்ன்ஃப்ளேக்ஸ் - 3/4 கப்,
பொடித்த நட்ஸ் - தேவையான அளவு.



செய்முறை :

* கார்ன்ஃப்ளேக்ஸை கையால் தூளாக்கி வைத்துக் கொள்ளவும்.

* ஒரு கடாயில் தண்ணீரை கொதிக்க விடவும்.

* மற்றொரு பாத்திரத்தில் சாக்லெட் அல்லது சாக்கோ சிப்புகளைப் போட்டு கொதிக்கும் கடாயின் மேல் வைக்கவும்.

* தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து சாக்லெட்டை கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.

* சாக்லெட் முழுவதும் உருகியவுடன் அடுப்பை அணைக்கவும்.

* இப்போது நட்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸை சாக்லெட் சாஸுடன் சேர்த்து, வேகமாகக் கலக்கவும்.

* நன்றாக கலக்கிய இந்தக் கலவையை சின்ன பேப்பர் கப்புகளில் ஸ்பூனால் எடுத்துப் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு மணி நேரம் குளிரூட்டி, பிறகு பரிமாறவும்.

* சூப்பரான சாக்லெட் கார்ன்ஃப்ளேக்ஸ் கேக் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News