லைஃப்ஸ்டைல்

மாலை நேர டிபன் முட்டை மசாலா இடியாப்பம்

Published On 2017-06-29 07:31 GMT   |   Update On 2017-06-29 07:31 GMT
மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த முட்டை மசாலா இடியாப்பம் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

இடியாப்பம் (உதிர்த்தது) - 2 கப்,
முட்டை - 3,
சின்ன வெங்காயம் - 10,
நாட்டு தக்காளி - 3,
பூண்டு - 6 பல்,
மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை :

* ஒரு பாத்திரத்தில் சிறிது உப்பு போட்டு, அதோடு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் முட்டை கலவையை கனமான அடையாக ஊற்றி, வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

* முட்டையை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

* தக்காளி, வெங்காயம், பூண்டு, மிளகாய்தூள் (விரும்பினால் கால் டீஸ்பூன் கரம் மசாலாதூள் சேர்த்து), எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும், அரைத்த மசாலாவை அதில் போட்டு நன்கு வதக்குங்கள்.

* ஓரங்களில் நன்கு எண்ணெய் கசிந்து வரும்போது, உதிர்த்த இடியாப்பத்தையும், நறுக்கிய முட்டை துண்டுகளையும் போட்டு, சுருளச் சுருளக் கிளறி இறக்குங்கள்.

* சூப்பரான முட்டை மசாலா இடியாப்பம் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News