பெண்கள் உலகம்

சூப்பரான வெஜிடபிள் கோப்தா கிரேவி

Published On 2017-06-27 12:51 IST   |   Update On 2017-06-27 12:51:00 IST
சப்பாத்தி, நாண், புலாவ், சாதத்திற்கு தொட்டு கொள்ள சூப்பரானது வெஜிடபிள் கோப்தா கிரேவி. இன்று இந்த வெஜிடபிள் கோப்தா கிரேவி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - 2
பச்சைப்பட்டாணி - அரை கப்
கேரட் - 2
பெரிய வெங்காயம் -  ஒன்று
சோள மாவு : 2 டேபிள் ஸ்பூன்
பிரெட் துண்டுகள் -  2
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
கரம்மசாலா - 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தழை -  அரை கப்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு -  தேவையான அளவு

கிரேவி தயாரிக்க  

சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 5
இஞ்சி, பூண்டு, விழுது -  2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
கரம்மசாலா தூள் - 1 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்



செய்முறை :

* உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் பட்டாணியை வேகவைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.

* பிரட்டை உதிர்த்து வைக்கவும்.

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் மிளகாய்த்தூள், கரம்மசாலா, மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

* அதைத் தொடர்ந்து வெந்த காய்கறிகள் கொத்தமல்லி தழை, உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

* அடுத்து இத்துடன் உதிர்த்த பிரெட், சோளமாவு சேர்த்து மசித்தாற்போல் கிளறி இறக்கி சூடு ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும்.

கிரேவி தயாரிக்க:

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* தக்காளியை அரைத்து கொள்ளவும்.

* வாணலியில் நெய் விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அத்துடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

* அடுத்து அரைத்த தக்காளியை சேர்த்து, அதோடு தேவைக்கு உப்பு சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க விடவும்.

* ஐந்து நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி வைக்கவும்.

* பரிமாறும்போது கிரேவியை சற்று சூடாக்கி கோப்தாக்களை சேர்த்து பரிமாறுங்கள்.

* அருமையான சுவையுடன் வெஜிடபிள் கோப்தா தயார்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News