லைஃப்ஸ்டைல்

கேரள கடலை கறி செய்வது எப்படி

Published On 2017-06-15 07:20 GMT   |   Update On 2017-06-15 07:20 GMT
கேரள கடலை கறி சாதம், சப்பாத்தி, ஆப்பம், புட்டுவுடன் சாப்பிட ஜோராக இருக்கும். இன்று இந்த கேரளா ஸ்டைல் கடலை கறியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கருப்பு கொண்டைக்கடலை - 150 கிராம்
தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிள்காய் -1
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகத்தூள் - அரைதேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 இணுக்கு
உப்பு - தேவைக்கு.



செய்முறை :

* கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைக்கவும்.

* ஊறவைத்த கடலையை குக்கரில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், தேவைக்கு உப்பு போட்டு மூடி 10 விசில் விட்டு, வேக வைத்து எடுக்கவும்.

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

* ஒரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு தேங்காய் துருவலை சேர்த்து லேசாக சிவக்க வறுக்கவும். அத்துடன் மல்லிப்பொடி, சீரகப்பொடி, பெருஞ்சீரகப் பொடி, மிளகாய்ப் பொடி சேர்த்து லேசாக வறுத்து ஆற வைக்கவும்.

* வறுத்த பொருட்களை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அத்துடன் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கி கூழ் பதம் வந்தவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து தேவைக்கு தண்ணீர்(கொண்டைக்கடலை வேக வைத்த தண்ணீர்) சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

* நன்கு கொதிவரவும், வேக வைத்த கொண்டைக்கடலையை சேர்த்து உப்பு சரிபார்க்கவும்.

* அடுப்பை மிதமான தீயில் வைத்து குழம்பு கெட்டித்தனமை தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து திக்கான பதம் வந்ததும் இறக்கவும்.

* சுவையான சத்தான கேரள கடலை கறி ரெடி.

* வெறும் சாதம், சப்பாத்தி, ஆப்பம், புட்டுவுடன் சாப்பிட ஜோராக இருக்கும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News