லைஃப்ஸ்டைல்

சூப்பரான சைடிஷ் டோஃபு மஞ்சூரியன்

Published On 2017-06-07 09:56 GMT   |   Update On 2017-06-07 09:57 GMT
பிரியாணி, புலாவ், நாண், சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள சூப்பரான சைடிஷ் இந்த டோஃபு மஞ்சூரியன். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

டோஃபு - 1 பாக்கெட்,
குட மிளகாய் - 1,
வெங்காயம் - 1,
வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி,
மைதா - 4 டீஸ்பூன்,
இஞ்சி - பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
தக்காளி சாஸ் - 1/2 டீஸ்பூன்,
சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - தேவைக்கு.



செய்முறை :

* மைதாவில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து தண்ணீருடன் பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைக்கவும்.

* வெங்காயம், குடமிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* டோஃபுவை சதுர துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.

* டோஃபு துண்டங்களை கரைத்து வைத்துள்ள மைதா மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயம், குட மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து நன்கு கலந்துவிடவும்.

* அடுத்து அதில் பொரித்த டோஃபு துண்டங்களை போட்டுக் கிளறி வெங்காயத்தாள் கொண்டு அலங்கரித்து உடனே பரிமாறவும்.

* சூப்பரான சைடிஷ் டோஃபு மஞ்சூரியன் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News