லைஃப்ஸ்டைல்

சூப்பரான சத்தான டபுள் பீன்ஸ் பிரியாணி

Published On 2017-06-07 07:10 GMT   |   Update On 2017-06-07 07:11 GMT
பிரியாணியில் நிறைய வெரைட்டிகள் உள்ளது. இன்று டபுள் பீன்ஸ் வைத்து சூப்பரான காரசாரமான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி - ஒரு கப்,
டபுள் பீன்ஸ் - அரை கப்,  
எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு,
வெஜிடபிள் ஸ்டாக் - 2 கப்
அன்னாசிப்பூ, உலர்வெந்தயக்கீரை - சிறிதளவு.
கொத்தமல்லி தழை - சிறிதளவு

அரைக்க :

பட்டை - அரை அங்குலத் துண்டு,
இஞ்சி - அரை அங்குலத் துண்டு,
சின்ன வெங்காயம் - 10 (உரிக்கவும்),
பச்சை மிளகாய் - 4,
பூண்டுப் பல் - 2,
க்ரீன் சில்லி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்,



செய்முறை :

* அரைக்க கொடுத்துள்ளவற்றை மிக்சியில் போட்டு சிறிதளவு நீர் விட்டு மையாக அரைத்துக்கொள்ளவும்.

* அரிசியை 10 நிமிடங்கள் நீரில் ஊறவைத்து, நீரை வடிக்கவும்.

* வாணலியில் நெய்விட்டு சூடாக்கி, அரிசியைச் சில நிமிடங்கள் வறுத்துக் கொள்ளவும்.

* குக்கரில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கி, டபுள் பீன்ஸ், உப்பு சேர்த்துக் கிளறவும்.

* அடுத்து அதில் க்ரீன் சில்லி சாஸ், அன்னாசிப்பூ, உலர் வெந்தயக் கீரைச் சேர்த்துக் கிளறவும்.

* பிறகு, வெஜிடபிள் ஸ்டாக் ஊற்றி, ஒரு கொதி வந்ததும் அரிசி சேர்த்து, குக்கரை மூடி வெயிட் போட்டு, 2 விசில் வந்ததும் இறக்கவும். ஆவி விட்டதும் குக்கரைத் திறந்து, கொத்தமல்லி தழை தூவிப் பரிமாறவும்.

* சூப்பரான டபுள் பீன்ஸ் பிரியாணி ரெடி.

குறிப்பு: வீட்டில் இருக்கும் காய்கறிகளை அலசி, நறுக்கி நீர்விட்டு குக்கரில் வேகவிட்டு மசித்து நீரை வடிகட்டி, பயன்படுத்தவும். இதுவே வெஜிடபிள் ஸ்டாக் ஆகும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News