பெண்கள் உலகம்

சப்பாத்தி, பரோட்டாவிற்கு சூப்பரான சைடிஷ் பஞ்சாபி சிக்கன்

Published On 2017-06-06 12:55 IST   |   Update On 2017-06-06 12:55:00 IST
சப்பாத்தி, பரோட்டாவிற்கு தொட்டுக்கொள்ள சூப்பரான பஞ்சாபி சிக்கன் கறி மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும். பஞ்சாபி சிக்கன் கறி எப்படி சமைப்பது எனப்பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :

சிக்கன் - 1/2 கிலோ
தயிர்  -  3/4 கப்
இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்
பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு.

அரைப்பதற்கு :

பெரிய வெங்காயம் -  3
தக்காளி - 3
கிராம்பு - 2
மிளகு - 5
ஏலக்காய் - 3
மல்லித்தூள்  - 1 டீஸ்பூன்



செய்முறை :

* அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சிக்கனை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு அதனுடன் தயிர், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு போட்டு பிரட்டி 1 மணிநேரம் ஊற வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து 5 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.

* மசாலா நன்றாக வதங்கியதும் அதில் சிக்கனை சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு அடுப்பை மிதான தீயில் வைத்து சிக்கனை வேக விடவும்.

* சிக்கன் நன்றாக வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

* சூப்பரான பஞ்சாபி சிக்கன் ரெடி.

* இந்த பஞ்சாபி சிக்கன் சப்பாத்தி, பரோட்டாவிற்கு ஏற்ற பக்கா உணவாகும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News