லைஃப்ஸ்டைல்

சூப்பரான உருளைக்கிழங்கு குலாப் ஜாமூன்

Published On 2016-09-24 07:54 GMT   |   Update On 2016-09-24 07:54 GMT
குலாப் ஜாமூன் வீட்டில் செய்வது மிகவும் எளிமையானது. உருளைக்கிழங்கை வைத்து குலாப் ஜாமூன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - 1 கப் (வேக வைத்து மசித்தது)
மைதா - 3 மேஜைக்கரண்டி
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
எண்ணெய்/நெய் - பொரிக்க

சிரப்புக்கு :

சர்க்கரை - 2 கப்
நீர் - 1 கப்
ரோஸ் வாட்டர் - சில துளிகள்
குங்குமப் பூ - 1 சிட்டிகை (தேவைப்பட்டால்)

செய்முறை  :

* உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துருவிக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் துருவிய உருளைக்கிழங்கு, மைதாமாவு, பேக்கிங் சோடா சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்

* பின்பு அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்

* அடி கனமாக ஒரு பாத்திரத்தில் அடுப்பில் வைத்து சர்க்கரையை போட்டு நீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு அதனுடன் சில துளிகள் ரோஸ் வாட்டர், குங்குமப்பூ சேர்த்து அதனை தனியே வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் வைத்து உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

* பொரித்த உருண்டைகளை சூடான சிரப்பில் போட்டு சில மணிநேரங்கள் ஊற வைத்த பின் பரிமாறவும்.

* சூப்பரான உருளைக்கிழங்கு குலாப் ஜாமூன் ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News