லைஃப்ஸ்டைல்

இனிப்பான ஆப்பிள் பாயாசம் செய்வது எப்படி

Published On 2016-09-23 08:46 GMT   |   Update On 2016-09-23 08:47 GMT
பாயாசத்தில் பழம் போட்டு செய்தால் சுவையாக இருக்கும். ஆப்பிள் கொண்டு பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் : 

ஆப்பிள் - 2 
பால் - 4 கப், 
சர்க்கரை - ஒரு கப், 
கோவா - கால் கப் (உதிர்த்துக் கொள்ளவும்),  
நெய் - 2 டேபிள்ஸ்பூன், 
மில்க்மெய்ட் - கால் கப், 
முந்திரி -  தேவைக்கு 
வெனிலா எசன்ஸ் -  ஒரு துளி.

செய்முறை : 

* ஆப்பிளை தோல் சீவி, விதை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் சிறிது நெய் ஊற்றி முந்திரியை போட்டு வறுத்து ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்.

* வாணலியில் கொஞ்சம் நெய் விட்டு, பொடியாக நறுக்கிய ஆப்பிளை லேசாக வதக்கி வைக்கவும். 

* பாலை நன்கு காய்ச்சி அதனுடன் உதிர்த்த கோவா, மில்க்மெய்ட், சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். 

* நன்கு கொதித்ததும் ஆப்பிள் துண்டுகளைச் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு... பொடித்த முந்திரி, வெனிலா எசன்ஸ் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

* இனிப்பான ஆப்பிள் பாயாசம் ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News