பெண்கள் உலகம்

ஓணம் ஸ்பெஷல்: ஓலன் செய்வது எப்படி

Published On 2016-09-14 12:05 IST   |   Update On 2016-09-14 12:05:00 IST
கேரளாவில் மிகவும் பிரபலமான பண்டிகை ஓணம். ஓணம் தினமான இன்று ஸ்பெஷல் சமையல் செய்முறைகளை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பூசணி கீற்று - 2
காராமணி - 1 கப்
பச்சைமிளகாய் - 4
தேங்காய் பால் - 1 கப்
சேப்பங்கிழங்கு - 3
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை :

* பூசணி கீற்றுகளை தோலை எடுத்து விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

* சேப்பங்கிழங்கை தனியாக வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

* காராமணியை வாசனை வரும் வரை வெறும் கடாயில் வறுத்து ஒரு கப் தண்ணீரில் வேகவைக்கவும்

* பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும்.

* அடுப்பில் ஒரு அகண்ட பாத்திரத்தை வைத்து அதில் நறுக்கிய பூசணித்துண்டுகள், சேப்பங்கிழங்கு, வேகவைத்த காராமணி, பச்சை மிளகாய், ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.

* பூசணித்துண்டுகள் நன்றாக வெந்ததும் தேவையான உப்பு சேர்க்கவும்.

* பின்னர் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடவும்.

* கடைசியில் தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டவும்.

* ஓலனை சாதத்தோடு பிசைந்தும் சாப்பிடலாம்.

* சுவையான ஓணம் ஸ்பெஷல் ஓலன் ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News