பெண்கள் உலகம்

ஓணம் ஸ்பெஷல்: உண்ணியப்பம்

Published On 2016-09-14 09:03 IST   |   Update On 2016-09-14 09:04:00 IST
கேரளாவில் மிகவும் பிரபலமான பண்டிகை ஓணம். ஓணம் தினமான இன்று ஸ்பெஷல் சமையல் செய்முறைகளை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: 

பச்சரிசி - 1 கப் 
வாழைப்பழம் - 1 
வெல்லம் - 1/2 கப் 
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை 
தேங்காய் துண்டுகள் - சிறிது 
நெய் - தேவையான அளவு 

செய்முறை :

* வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி வைத்து கொள்ளவும்.

* தேங்காயை மெல்லிய துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.

* பச்சரிசியை நன்கு சுத்தம் செய்து, அதை நன்கு மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

* அந்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தை ஊற்றி பிசைய வேண்டும். 

* பின்பு அதில் ஏலக்காய் தூள், பிசைந்த வாழைப்பழம் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். 

* மெல்லியதாக நறுக்கிய தேங்காய் துண்டுகளையும் அத்துடன் சேர்த்து, ஓரளவு கொட்டியாக கலந்து கொள்ள வேண்டும். 

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான நெய் ஊற்றி, காய்ந்ததும், மாவை அப்பங்களை போட்டு எடுக்க வேண்டும். 

* இப்போது சுவையான கேரள ஸ்டைல் உண்ணியப்பம் ரெடி!!! 

குறிப்பு: வேண்டுமெனில் பணியாரக் கல்லிலும் நெய் விட்டு, மாவை ஊற்றி, பணியாரம் போன்றும் செய்து சாப்பிடலாம்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News