பெண்கள் உலகம்

சன்டே ஸ்பெஷல் விரால் மீன் குழம்பு

Published On 2016-09-10 14:10 IST   |   Update On 2016-09-10 14:29:00 IST
சன்டே சிக்கம், மட்டன் சாப்பிட்டு சலித்து போனவர்கள் விரால் மீன் குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

விரால் மீன் - 500 கிராம்
சின்ன வெங்காயம் - 250 கிராம்
தக்காளி - 250 கிராம்
தேங்காய்ப்பால் - 2 கப்
பூண்டு - 1
கடுகு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
வெந்தயம் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - அளவுக்கு
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :

* மீனை நன்கு கழுவி துண்டுகளாக வெட்டக் கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, காய்ந்தமிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை, பூண்டு போட்டு தாளித்த பின் வெங்காயம் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

* அடுத்து பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

* அடுத்து அதில் தேங்காய்ப் பாலை விட்டு நன்கு கொதிக்கும் போது மீன் துண்டுகளைப் போட்டு ஒரு கொதி வந்த பின் அடுப்பை மிதமான தீயில் 7 நிமிடம் வைத்து கொத்தமல்லிதழை தூவி இறக்கவும்.

* சுவையான விரால் மீன் குழம்பு ரெடி.

குறிப்பு: எப்போதுமே விறால் மீன் வாங்கும்போது முக்கால் கிலோ அல்லது அதுக்கு மேல எடை இருக்கிற மாதிரி பார்த்து வாங்க வேண்டும். அதுக்கு கீழே எடை இருந்தா ருசியாகவே இருக்காது.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News