பெண்கள் உலகம்
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: ஜவ்வரிசி வடை
வட இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி மற்றும் நவராத்தியின் போது ஜவ்வரிசி வடை செய்யப்படுகிறது. வடக்கே சாபுதானா வடா என்றழைக்கப்படும் இந்த வடை நன்கு முறுகலாகவும் நல்ல சுவையாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள் :
ஜவ்வரிசி - 1 கப்
உருளைக்கிழங்கு - 4,
வேர்க்கடலை - 1/2கப்
சீரகம் - 1 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 2,
துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்,
கொத்துமல்லி - சிறிதளவு,
சர்க்கரை - 2 டீஸ்பூன்,
கோதுமை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை:
* உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்து வைக்கவும்.
* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வேர்க்கடலையை வறுத்து கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
* ஜவ்வரிசியை குறைந்தது 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும், பிறகு நீரை முழுவதுமாக வடித்து விட வேண்டும்.
* ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கை ஜவ்வரிசியுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவேண்டும்.
* இத்துடன் வறுத்து பொடித்த வேர்க்கடலை, கொத்தமல்லி, சீரகம், எலுமிச்சைசாறு, கோதுமை மாவு, உப்பு, சர்க்கரை, துருவிய இஞ்சி, ப.மிளகாய் சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவேண்டும்.
* நன்கு கலந்த மாவை சிறு உறுண்டையாக பிடித்து உள்ளங்கையில் வைத்து வடையாக தட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.
* பொன் நிறமாக பொரித்து எடுத்த ஜவ்வரிசி வடையை சூடாக இருக்கும் போதே சாப்பிடலாம். சர்க்கரை சேர்த்து கலந்த தயிருடன் தொட்டு சாப்பிட இந்த ஜவ்வரி வடை பிரமாதமாக இருக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.