பெண்கள் உலகம்

சூப்பரான காடை வறுவல் செய்வது எப்படி

Published On 2016-09-01 09:01 IST   |   Update On 2016-09-01 09:01:00 IST
சிக்கனை விட உடலுக்கு மிகவும் நல்லது காடை. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

காடை - 4
எலுமிச்சைசாறு - 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது  - 3 ஸ்பூன்
மஞ்சள் தூள்   - 1 ஸ்பூன்
கரம்மசாலாத்தூள்  - 2 ஸ்பூன்
தயிர்  - 2 ஸ்பூன்
மிளகாய் தூள்  - 2 ஸ்பூன்
எண்ணெய்  - பொரிக்க
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

* காடையை சுத்தம் செய்து 4 துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த காடையை போட்டு அதனுடன் எலுமிச்சைசாறு, இஞ்சி, பூண்டுவிழுது, மஞ்சள் தூள், கரம்மசாலாத்தூள், தயிர், மிளகாய் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

* ஒரு காடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காடை துண்டை ஒவ்வொன்றாக போட்டு பொரிக்கவும்.

* சுவையான காடை வறுவல் தயார்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News