பெண்கள் உலகம்
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: பால் பாயாசம்
இனிப்புகளில் பால் பாயாசம் மிகவும் சிறப்பானது. இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்ய பால் பாயாசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பால் - 1/2 லிட்டர்
சேமியா - 50 கிராம்
ஏலக்காய் - 4
ஜவ்வரிசி - ஒரு கைப்பிடி
சர்க்கரை - 2 கப்
முந்திரி - 10
பாதாம் - 10
உலர் திராட்சை - 10
குங்குமப்பூ - சிறிது
நெய் - தேவையான அளவு
செய்முறை :
* அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் சிறிது நெய் விட்டு சேமியாவை சிவக்க வறுத்து கொள்ளவும்.
* ஒரு வாணலியில் தண்ணீர் விட்டு, தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் ஜவ்வரிசி, வறுத்த சேமியாவை சேர்த்து, ஓரளவு வேக வைக்கவும்.
* பின் அந்த சேமியாவில் உள்ள நீரை வடித்து விடவும்.
* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, நெய்யை ஊற்றி, காய்ந்ததும் அதில் முந்திரி, உலர் திராட்சை மற்றும் பாதாம் சேர்த்து நன்று பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் பாலை விட்டு, அதில் ஏலக்காயை நன்கு தட்டி போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். பாலானது நன்கு கொதித்ததும் அதில் சர்க்கரையை போட்டு, சர்க்கரை கரையும் வரை கொதிக்கவிடவும்.
* பின்பு அதில் குங்குமப்பூவை சேர்த்து, தீயை சிம்மில் 2 நிமிடம் வைக்கவும்.
* அதன் பின் அதில் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
* கடைசியாக அதில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் பாதாமை சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கவும்.
* இப்போது கிருஷ்ண ஜெயந்திக்கு ஏற்ற சுவையான பால் பாயாசம் ரெடி!!!
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.