பெண்கள் உலகம்

மில்க்மெய்டு சாக்லேட் பர்ஃபி செய்வது எப்படி

Published On 2016-08-23 14:14 IST   |   Update On 2016-08-23 14:24:00 IST
வீட்டில் எளிய முறையில் மில்க்மெய்டு சாக்லேட் பர்ஃபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

மில்க்மெய்டு - அரை டேபிள்ஸ்பூன்
முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன்
பாதாம் - ஒரு டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் - அரை கப்
சர்க்கரை - அரை கப்
கோகோ - மூன்று டேபிள் ஸ்பூன்

செய்முறை :

* முந்திரி, பாதாமை இரண்டாக உடைத்து கொள்ளவும்.

* அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து மில்க்மெய்டு, வெண்ணெய், சர்க்கரை, கோகோ ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் கிளறவும்.

* கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும். அந்த பக்குவம் வந்ததும் இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி சமன்படுத்தி, மேலே முந்திரி, பாதாம் தூவி ஆறவிடவும்.

* ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.

* குழந்தைகள் இந்த மில்க்மெய்டு சாக்லேட் பர்ஃபி விரும்பி சாப்பிடுவார்கள்.

* உங்களுக்கு விருப்பமான நட்ஸ் அனைத்தையும் இதில் சேர்த்து கொள்ளலாம்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News