பெண்கள் உலகம்
மஷ்ரூமில் குழப்பு, தொக்கு செய்வதற்கு பதிலாக மஷ்ரூம் ஆட்லெட் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மஷ்ரூம் ஆம்லெட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
காளான் - 200 கிராம்
முட்டை - 6
பெரிய வெங்காயம் - 50 கிராம்
பச்சைமிளகாய் - 3
தக்காளி - 50 கிராம்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பூண்டு - 3 பல்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்
மிளகுத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு
செய்முறை :
* காளானை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து செய்து ஒவ்வொரு காளானையும் நான்கு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
* வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, நறுக்கிய காளான், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும்.
* அனைத்தும் நன்றாக வதங்கியதும் அத்துடன் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மிளகு தூள், கொத்தமல்லித்தழை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி, கலவையை இறக்கி ஆறவிடவும்.
* ஒரு பவுலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவும்.
* தோசைக்கல்லை சூடாக்கி, சிறிதளவு எண்ணெய் தேய்த்து அடித்து வைத்திருக்கும் முட்டையை ஊற்றி, இதன் மேல் வதக்கிய கலவையைப் பரவ விட்டு சிறிது நேரம் வேக விடவும், பின்பு, ஆம்லெட்டை இரண்டாக மடித்து, திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.
* ஆம்லெட்டின் மேல் மிளகுத்தூள் தூவி சூடாகப் பரிமாறவும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.