பெண்கள் உலகம்
குழந்தைகளுக்கு விருப்பமான இட்லி - 65
இட்லி சாப்பிட குழந்தைகளுக்கு பிடிக்காது. மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இட்லியை இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :
இட்லி - 6
காஷ்மீரி மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன்
கார்ன்ஃப்ளார் மாவு - 25 கிராம்
இஞ்சி - பூண்டு விழுது - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 15 இலை
மைதா மாவு - 40 கிராம்
சோயா சாஸ் - 1 ஸ்பூன்
சீரகத்தூள் - அரை டேபிள்ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
ஓமப்பொடி - அரை டீஸ்பூன்
எண்ணெய் - 100 மில்லி
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சைப் பழம் - ஒன்றில் பாதி
பெரிய வெங்காயத் துண்டுகள் - அலங்கரிக்க
செய்முறை :
* ஒவ்வொரு இட்லியையும் தலா ஆறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கார்ன்ஃப்ளார் மாவு, உப்பு, சீரகத்தூள், சோயா சாஸ், காஷ்மீரி மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், ஓமப்பொடி, இஞ்சி-பூண்டு விழுது, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.
* இந்தக் கலவையில் இட்லித் துண்டுகளை சேர்த்துக் உடையாமல் மெதுவாக கலக்கவும்.
* கடாயில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா பிரட்டி வைத்த இட்லிகளை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
* கறிவேப்பிலையைத் தனியாக பொரித்தெடுக்கவும்.
* பொரித்த இட்லித் துண்டுகளின் மேலே கறிவேப்பிலையைத் தூவி எலுமிச்சை மற்றும் வட்டமாக நறுக்கிய வெங்காய்த்துண்டுகளுடன் பரிமாறவும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.