பெண்கள் உலகம்

மாலை நேர ஸ்நாக்ஸ்: முட்டை பஜ்ஜி

Published On 2016-08-15 14:15 IST   |   Update On 2016-08-15 14:15:00 IST
சில குழந்தைகளுக்கு அவித்த முட்டை பிடிக்காது, அவர்களுக்கு இப்படி பஜ்ஜியாக செய்து கொடுக்கலாம்.
தேவையான‌ பொருட்க‌ள் :

முட்டை - 3
கடலை மாவு - அரை டம்ளர்
அரிசி மாவு - ஒரு மேசை கரண்டி
காஷ்மீரி சில்லி பொடி - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
இஞ்சி பூண்டு பேஸ்ட் ‍ - கால் தேக்கரண்டி
மிளகு தூள் - சிறிது
ரெடி கலர் பொடி - கால் தேக்கரண்டி
இட்லி சோடா - சிறிது

செய்முறை :

* முட்டையை வேகவைத்து ஆறியதும் ஒவ்வொரு முட்டையையும் 2 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

* க‌ட் செய்த‌ முட்டையில் சிறிது மிளகு தூள், உப்பு தூவி கொள்ள‌வும்.

* ஒரு பாத்திரத்தில் க‌ட‌லைமாவு, அரிசி மாவு, உப்பு, மிள‌காய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், இட்லி சோடா, ரெடிக‌ல‌ர் பொடி அனைத்தையும் ஒன்றாக‌ போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து ப‌ஜ்ஜி மாவு ப‌த‌த்தில் க‌ரைத்து கொள்ளவும்.

* அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒவ்வொரு முட்டையாக‌ மெதுவாக‌ உடையாம‌ல் போட்டு எடுத்து பஜ்ஜி மாவுவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க‌வும்.

* சுவையான‌ முட்டை ப‌ஜ்ஜி ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News