பெண்கள் உலகம்

செட்டிநாடு அயிர மீன் குழம்பு செய்வது எப்படி

Published On 2016-08-09 14:28 IST   |   Update On 2016-08-10 07:24:00 IST
எளிய முறையில் செட்டிநாடு அயிர மீன் குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

அயிரை மீன் - 300 கிராம்
வெங்காயம் ‍ - 250 கிராம்
தக்காளி - 2
பூண்டு - 15 பல்
மிளகாய் - 3
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - கொஞ்சம்
எண்ணெய் - ‍ 3 க‌ர‌ண்டி
கடுகு, உ.பருப்பு - அரைக்கரண்டி
வெந்தயம் - கால் க‌ர‌ண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்க‌ர‌ண்டி
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
தனியா தூள்- ‍ 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவைக்கு.
புளி - சிறிய எலுமிச்சை அளவு
தேங்காய் விழுது  - 3 தேக்கரண்டி
 
செய்முறை :

* ஒரு பாத்திரத்தில் அயிரை மீன், கல் உப்பு போட்டு மூன்று நான்கு முறை தண்ணீர் விட்டு நன்றாக கழுவ வேண்டும்.

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* புளியைக் கரைத்து கொள்ளவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உ.பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, பூண்டு போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியவுடன், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.

* தக்காளி மசிந்தவுடன், மிளகாய்த்தூள், தனியா தூள், மஞ்சள் தூள், சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் புளித்தண்ணீர் விட வேண்டும். நன்றாக கொதித்து மசாலா வாடை அடங்கியதும் மீனை போட வேண்டும்.

* 5 நிமிடம் கழித்து தேங்காய் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.

* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்க வேண்டும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News