பெண்கள் உலகம்

மொறு மொறுப்பாக காலிபிளவர் பஜ்ஜி செய்வது எப்படி

Published On 2016-07-27 14:26 IST   |   Update On 2016-07-27 14:26:00 IST
காலிபிளவர் பஜ்ஜி மிகவும் சுவையாக இருக்கும். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

காலிபிளவர்  - 1
எண்ணெய் - பொரிக்க
அரிசி மாவு - 2 ஸ்பூன்
பஜ்ஜி மாவு  - 200 கிராம்
உப்பு  - தேவையான அளவு

செய்முறை :

* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிவந்ததும் சிறிது உப்பு போட்டு அடுப்பை அணைத்து விடவும்.

* காலிபிளவரை பெரிய துண்டுகளாக நறுக்கி சுடுதண்ணீரில் போட்டு 15 நிமிடம் வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் பஜ்ஜிமாவுடன் அரிசி மாவு, தேவையான அளவு தண்ணீரில் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் காலிபிளவரை பஜ்ஜிமாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

* சுவையான சூடான பஜ்ஜி ரெடி.

* இதே மாதிரி வெங்காயம், அப்பளம், கத்தரிக்காய், வாழைக்காய் பஜ்ஜியும் தயார் செய்யலாம்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News