பெண்கள் உலகம்
ரம்ஜான் ஸ்பெஷல்: இளநீர் கடல் பாசி
எளிய முறையில் இளநீர் கடல் பாசியை வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கடல் பாசி - 10 கிராம்
தண்ணீர் - இரண்டு கப்
இளநீரில் கிடைக்கும் தண்ணீர் - அரை கப்
சர்க்கரை - தேவையான அளவு
இளநீரில் இருக்கும் வழுக்கை தேங்காய் - சிறிதளவு
பாதாம் - ஒரு மேசைக்கரண்டி (பொடியாக அரிந்தது தேவைப்பட்டால்)
செய்முறை :
* ஒரு வாய் அகலமாக உள்ள சட்டியில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கடல்பாசி மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கிளறி விட்டு கொண்டே கொதிக்க விடவும்.
* நன்கு கொதித்து கடல் பாசி கரைந்து தண்ணீர் தெளிய ஆரம்பிக்கும் போது சட்டியை அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
* இறக்கி வைத்திருக்கும் கடல்பாசி கலந்த தண்ணீரை மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும்.
* சதுரமாக உள்ள பாத்திரத்தில் வடிகட்டிய தண்ணீரை ஊற்றி அதில் இளநீரை சேர்த்து கலந்து அதில் உள்ள வழுக்கையை கரண்டியால் சுரண்டி மேலே தூவி விடவும்.
* அடுத்து அதன் மேல் பாதாமை தூவவும்.
* சூடு அறியதும் லேசாக கெட்டி ஆகும். அப்போது அந்த பாத்திரத்தை ப்ரிட்ஜில் வைக்கவும்.
* கடல் பாசி நன்கு கெட்டியாக மாறி குளிர்ச்சியடைந்ததும் எடுத்து விரும்பிய வடிவில் நறுக்கிக் கொள்ளவும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.