பெண்கள் உலகம்

காளான் - சிக்கன் தொக்கு செய்முறை விளக்கம்

Published On 2016-06-16 07:52 IST   |   Update On 2016-06-16 07:52:00 IST
சிக்கனுடன் காளான் சேர்த்து சமைத்தால் மிகவும் சுவையாக இருக்கும். இப்போது காளான் சிக்கன் எப்படி செய்து என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சிக்கன் - 1/2 கிலோ
குடைமிளகாய் - 150 கிராம்
காளான் - 250 கிராம்
சாம்பார் வெங்காயம் - 150 கிராம்
பச்சைமிளகாய் - 4
மிளகுத்தூள் இடித்தது - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 6 பற்கள்

செய்முறை :

* சிக்கன் துண்டுகளைச் சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும்.

* குடைமிளகாய், காளானை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சாம்பார் வெங்காயத்தை உரித்து கீறிக்கொள்ளவும், பச்சை மிளகாயை இடித்துக் கொள்ளவும்.

* இஞ்சி, பூண்டு தட்டி எடுத்துக் கொள்ளவும்.

* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயத்தை நன்கு வதக்கவும்.

* பின் அதில் நறுக்கிய குடைமிளகாய், சிக்கன் இவற்றை சேர்த்து வதக்கவும்.

* சிக்கன் முக்கால் பாகம் வெந்ததும் காளாளை போட்டு 5 நிமிடம் வதக்கிய பின்னர் தட்டி வைத்துள்ள மிளகாய், இஞ்சி பூண்டு இவை சேர்த்து வதக்கவும்

* இவை ஒன்று சேர்ந்து வேகுமளவு நீர் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் மூடி வைக்கவும்.

* நன்கு வெந்தவுடன் கடைசியாக மிளகுத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

* சுவையான காளான் - சிக்கன் தொக்கு ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News