பெண்கள் உலகம்

குழந்தைகளுக்கு விரும்பமான கேழ்வரகு மிக்சர்

Published On 2016-06-09 09:02 IST   |   Update On 2016-06-09 09:02:00 IST
குழந்தைகளுக்கு மிகவும் விரும்பமான கேழ்வரகு மிக்சர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :  

கேழ்வரகு - 200 கிராம்,
மிளகாய்த் தூள் - சிறிதளவு,
பொட்டுக்கடலை, வேர்க்கடலை, பொரித்த அவல் - தலா 50 கிராம்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

* கேழ்வரகை அரைத்து மாவாக்கிக்கொள்ள வேண்டும்.

* இந்த மாவில் உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு, கெட்டிப் பதத்தில் பிசைய வேண்டும்.

* மாவை ஓமப்பொடி அச்சில் போட்டு, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

* இதனுடன், பொட்டுக்கடலை, வேர்க்கடலை பொரித்த அவல் சேர்த்தால், சுவையான கேழ்வரகு மிக்சர் ரெடி!

பலன்கள்:

கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் உள்ளன. உடலுக்கு வலிமையைத் தரும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News