சமையல்

குழந்தைகளை விரும்பி சாப்பிட வைக்கும் சுரைக்காய் கபாப்...!

Published On 2024-02-16 10:00 GMT   |   Update On 2024-02-16 10:01 GMT
  • குழந்தைள் விரும்பி சாப்பிடுவர்.
  • காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இது நல்ல மாற்று.

குழந்தைகள் சுரைக்காய் என்றாலே முகம் சுளித்து சாப்பிட மறுத்துவிடுவார்கள். குழந்தைகளுக்குப் பிடித்த வகையில் எளிமையாகவும், சுவையாகவும் சுரைக்காய் வைத்து கபாப் செய்யலாம் வாங்க...

தேவையான பொருட்கள்:

சுரைக்காய் துருவல் – ஒன்றரை கப்

இஞ்சி – ஒரு டீஸ்பூன்

கடலைப்பருப்பு – அரை கப்

சோம்பு – ஒரு டீஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு

கார்ன்ஃப்ளார் – ஒரு டேபிள்ஸ்பூன்

கரம் மசாலா தூள் – ஒரு டீஸ்பூன்

பூண்டு – 3 பல்

பச்சை மிளகாய் – 5

மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் சுரைக்காய்களை அதன் தோலினை நீக்கிவிட்டு அதனை துருவி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் கடலைப் பருப்பை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பின்னர் கடலைப்பருப்பினை தண்ணீரை வடித்துவிட்டு, இதனுடன் சுரைக்காய் துருவல், இஞ்சித் துருவல் சேர்த்துக் கலந்து ஆவியில் வேகவிட்டு எடுக்க வேண்டும். ஆறிய பிறகு இதனுடன் பூண்டுப் பல், பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர் விடாமல் வடைக்கு அரைப்பதைப் போல் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.

இதனுடன் உப்பு, சோம்பு, கொத்தமல்லித்தழை, மஞ்சள்தூள், சோள மாவு, கரம் மசாலா தூள் சேர்த்து பிசைய வேண்டும். மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி, நீளவாக்கில் விரல்களைப் போல் உருட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நீளவாக்கில் உருட்டியவற்றைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்க வேண்டும். இதனை சூடாக தக்காளி சாஸ் உடன் பரிமாறலாம்.

Tags:    

Similar News