சமையல்

வெந்தய கீரை பருப்பு கூட்டு

Update: 2023-06-10 06:08 GMT
  • வெந்தய கீரை கூட்டு, மிகவும் சத்தான, சுவையான கூட்டு.
  • சூடான சாதத்தில் இந்த கூட்டு, நெய் சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

தேவையான பொருட்கள்

வெந்தய கீரை - 2 கப்

பாசி பருப்பு - 5 மேஜைக்கரண்டி

தேங்காய் - கால் கப்

சாம்பார் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

சர்க்கரை - 1/4 தேக்கரண்டி

தாளிக்க

எண்ணெய் - 2 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் -7

செய்முறை

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாசி பருப்பை நன்றாக கழுவி 1/2 கப் தண்ணீர் சேர்த்து, 2 விசில் மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.

வெந்தய கீரையை ஆய்ந்து, கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.

சிறிது தண்ணீரை கொதிக்கவைத்து, அதில் வெந்தய கீரை, சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து வேக வைக்கவும்.

தேங்காயை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

வெந்த கீரை வெந்ததும் அதில் வேக வைத்த பருப்பை சேர்க்கவும்.

அடுத்து அதில் அரைத்த தேங்காயையும் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் தாளிக்க வேண்டிய பொருட்களை சேர்த்த பின்னர் சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமானவுடன் கூட்டில் சேர்த்து கலக்கவும்.

இப்போது சூப்பரான வெந்தய கீரை பருப்பு கூட்டு ரெடி.

அறவே கசப்புத்தன்மை தெரியாது. எந்த சாதத்துடனும் தொட்டு சாப்பிடலாம்.

ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News