சமையல்

வீட்டில் பிரட் இருந்தால் இதை செய்து பாருங்கள்

Published On 2023-08-25 10:28 GMT   |   Update On 2023-08-25 10:28 GMT
  • வித்தியாசமான சுவையை கொடுக்கும்.
  • குழந்தைகள் முதல் அனைவருக்கும் பிடிக்கும்.

பாயாசம் என்றாலே நமக்கு பால் பாயாசம், பருப்பு பாயாசம், சேமியா பாயாசம் நினைவுக்கு வரும். ஆனால், இம்முறை வித்தியாசமான பாயாசங்களை முயற்சி செய்து பார்க்கலாம். இது உண்மையில் வித்தியாசமான சுவையை கொடுக்கும். அதுமட்டுமல்லாமல், விருந்துகளில் சிறப்பு சேர்க்கும்.

தேவையான பொருட்கள்:

பிரட் - 4 துண்டுகள்

சர்க்கரை- 2 கப்

சேமியா- அரை கப்

பால்- ஒரு லிட்டர்'

நெய்- தேவையான அளவு

முந்திரி, பாதாம்- அலங்கரிக்க

கான்பிளவர்- 2 ஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பிரட் துண்டுகளை பிய்த்து போட்டு பிரட் துண்டுகள் மூழ்கும் அளவிற்கு பால் ஊற்றி பிரட் துண்டுகள் நன்றாக ஊறியதும் அதனை நன்றாக கலந்து அதில் கான்பிளவர் மாவை கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ளவும். அதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ளவும்.

அந்த உருண்டைகளை ஒரு கடாயில் சிறிதளவு நெய் சேர்த்து அதில் முந்திரி, பாதாமை வறுத்து எடுத்து தனியே வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் உருட்டி வைத்து உருண்டைகளை அதில் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதே கடாயில் மீண்டும் சிறிதளவும் நெய் சேர்த்து அதில் சேமியாவை நிறம் மாறும் வரை வறுத்து அதில் பாலை ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும். நன்கு கொதி வந்ததும் அதில் சர்க்கரை ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி மற்றும் வறுத்த பிரட் உருண்டைகளை சேர்க்க வேண்டும். பால் கொதித்து உருண்டைகள் பாலில் நன்றாக ஊறி வந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும். அருமையான பிரட் உருண்டை பால் பாயாசம் தயார். இதனை சூடாகவும் சாப்பிடலாம். ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்றும் பரிமாறலாம்.

Tags:    

Similar News