சமையல்

வைட்டமின் சி நிறைந்த நார்த்தங்காய் பச்சடி

Update: 2023-06-09 06:21 GMT
  • நார்த்த‌ங்காயை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம்.
  • மலச்சிக்கல், சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது நார்த்தங்காய்.

தேவையான பொருட்கள் :

நார்த்தங்காய் - 5,

வெல்லம் - 250 கிராம்,

பச்சை மிளகாய் - 4,

தனி மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,

கடுகு - கால் டீஸ்பூன்,,

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,

எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

* நார்த்தங்காயின் தோல், கொட்டைகளை நீக்கி, சுளைகளை எடுத்து பொடியாக நறுக்கவும்.

* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், நார்த்தங்காய் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.

* வடிகட்டி வைத்த வெல்லத்தை சேர்க்கவும்.

* எல்லாம் சேர்ந்து நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் அடுப்பிலிருந்து இறக்கவும்.

* அவ்வளவு தான் சூப்பரான நார்த்தங்காய் பச்சடி ரெடி.

* நன்றாக ஆறியதும் காற்று போகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.

ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News