சமையல்

வீட்டுல மாம்பழம் இருக்கா... அப்போ வாங்க ஜாம் செய்யலாம்...

Published On 2023-06-03 09:41 GMT   |   Update On 2023-06-03 09:41 GMT
  • மாம்பழத்தில் குழந்தைகளுக்கு பிடித்தமான பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
  • இன்று மாம்பழ ஜாம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

தித்திப்பான பழுத்த மாம்பழம் - 1,

சர்க்கரை - 1 கப்,

மாம்பழ எசன்ஸ் - சில துளிகள்,

இஞ்சி துருவல் - 1 டீஸ்பூன்,

எலுமிச்சை பழம் - 1.

செய்முறை:

மாம்பழத்தை நன்றாக கழுவி தோலை நீக்கி விட்டு சதை பகுதியை மட்டும் எடுத்து நன்றாக அரைத்து கொள்ளவும். (விருப்பப்பட்டால் சிறிய துண்டுகளாகவும் நறுக்கி கொள்ளலாம்.

அடுப்பில் அடி கனமான பாத்திரம் (அ) நான்ஸ்டிக் கடாயை வைத்து மாம்பழத்தை போட்டு 5 நிமிடம் நன்றாக வதக்கவும்.

அடுத்து அதில் எலுமிச்சை சாறு பிழிந்து நன்றாக வதக்கவும்.

அடுத்து அதில் சர்க்கரை சேர்த்து 25 நிமிடங்கள் மிதமான தீயில் கைவிடாமல் கிளறி விடவும்.

மாம்பழ கலவை திக்கான பதம் வரும் போது இஞ்சி துருவல், மாம்பழ எசன்ஸ் சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் கிளறி விடவும்.

இஞ்சி பச்சை வாசனை போனவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

சிறிது ஜாமை ஒரு தட்டில் ஊற்றினால் அது ஓடாமல் நெகிழ இருக்கும் சமயத்தில் அடுப்பை அணைக்கவும் (ஜாம் போன்றவை செய்யும்போது அடுப்பை 'சிம்'மில் வைத்தால் அடிபிடிக்காது).

நன்றாக ஆறியதும் கண்ணாடி டப்பாவில் போட்டு வைக்கவும்.

இப்போது சூப்பரான மாம்பழ ஜாம் ரெடி.

ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News