சமையல்

சூப்பரான சைடிஷ் கதல் மசாலா

Published On 2023-07-10 05:46 GMT   |   Update On 2023-07-10 05:46 GMT
  • பலாக்காய் வைத்து சமைக்கும் ரெசிபி இது.
  • சப்பாத்தி, சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

பலாக்காய் - 1 சிறியது

பிரியாணி இலை - 2

காய்ந்த மிளகாய் - 3

மிளகு - 1 டீஸ்பூன் (லேசாக இடித்தது)

பெருங்காயம் - ½ டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்

மல்லித்தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்

பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது

சின்ன வெங்காயம் - ½ கிலோ

பூண்டு - 20 பல்

இஞ்சி - 3 அங்குலத் துண்டு

எண்ணெய் - தேவையான அளவு

இளஞ்சூடான தண்ணீர் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

கரம் மசாலாவுக்கு:

கருப்பு ஏலக்காய் - 2

பச்சை ஏலக்காய் - 3

ஜாதிக்காய் - 1

ஜாதிபத்திரி - 1

சீரகம் - 1 டீஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

கிராம்பு - 10

கல்பாசி - 2 கிராம்

பட்டை - 1

அன்னாசி பூ - 1

செய்முறை:

கரம் மசாலா தயாரிப்பதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்களுடன் உப்பு சேர்த்து அரைத்துப் பொடியாக்கிக்கொள்ளவும்.

பலாக்காயை மேல்தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். இதனால், பலாக்காயில் உள்ள பிசுபிசுப்பு குறையும், காய் கருத்துப் போகாமல் இருக்கும்.

இஞ்சி மற்றும் 10 பல் பூண்டை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, பெருங்காயம், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பின்பு சின்ன வெங்காயம், பலாக்காய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி வாணலியை மூடி வைக்கவும்.

10 நிமிடங்கள் கழித்து வாணலியைத் திறந்து, இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கிளறவும்.

3 நிமிடங்களுக்குப் பிறகு 200 மில்லி இளஞ்சூடான தண்ணீரைச் சேர்த்துக் கிளறி, வாணலியை மூடி வைக்கவும்.

பத்து நிமிடங்களுக்குப் பின்னர், தோலுடன் கூடிய 10 பல் பூண்டு, அரைத்த கரம் மசாலா, கருப்பு மிளகு, காய்ந்த வற்றல், மிளகாய்த் தூள், மல்லித்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

இப்போது 300 மில்லி இளஞ்சூடான தண்ணீரைச் சேர்த்து அதிகமான தீயில் 8 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும்.

பின்பு குறைந்த அளவு தீயில் 25 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து, அவ்வப்போது கிளறி விடவும்.

கலவையில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் நிலையில், அடுப்பை அணைத்து நன்றாகக் கிளறி இறக்கவும். சுவையான கதல் மசாலா தயார்.

லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News