சமையல்

கரண்டி ஆம்லெட் செய்வது எப்படி?

Published On 2022-11-11 09:10 GMT   |   Update On 2022-11-11 09:10 GMT
  • வழக்கமான ஆம்லெட் சாப்பிட்டு அலுத்துப் போயிருக்கும்.
  • முட்டைப் பிரியர்களுக்கு கரண்டி ஆம்லெட் நல்ல மாற்று.

தேவையான பொருட்கள் :

முட்டை - 1

சின்ன வெங்காயம் - கைப்பிடி

ப.மிளகாய் - 1

கொத்தமல்லி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத்தூள் - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

சின்னவெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

அடுத்து அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், கறிவேப்பிலை, மிளகு தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

ஒரு குழிக்கரண்டியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் முட்டை கலவையை ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறம் வெந்ததும் எடுக்கவும்.

இப்போது சூப்பரான கரண்டி ஆம்லெட் ரெடி.

ஓட்டல்களில் ஒவ்வொருவருக்கும் இது போன்று செய்து கொடுக்க நேரமாகும் என்பதால், தற்போது தோசைக் கல்லிலேயே குழிகள் அமைக்கப்பட்டு அதிலேயே கரண்டி ஆம்லெட் சுடச்சுடத் தயார் செய்யப்படுகிறது.

Tags:    

Similar News