சமையல்

கமகமக்கும் காராமணிக்காய் பொரியல்

Published On 2023-05-10 06:49 GMT   |   Update On 2023-05-10 06:49 GMT
  • காராமணிக்காயில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
  • தினமும் ஏதாவது ஒரு காயை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

தேவையான பொருட்கள்:

காராமணிக்காய் - 400 கிராம்

சாம்பார் வெங்காயம் - 200 கிராம்

கடுகு - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி

சில்லி பிளேக்ஸ் - 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி

தேங்காய் எண்ணெய் - தேவைக்கேற்ப

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

காராமணிக்காயை நன்றாக சுத்தம் செய்து சற்று பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும், பின்னர் அவற்றை அடி கனமான பாத்திரத்தில் போட்டு எண்ணெய் சேர்க்காமல் மிதமான தீயில் 5 நிமிடங்கள் வதக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை, பொடிதாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

பின்பு அதில் மஞ்சள் தூள், சில்லி பிளேக்ஸ் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து மீண்டும் வதக்கவும்.

பிறகு அதில், வதக்கிய காராமணியை மசாலாவுடன் சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கிளறவும்.

இப்பொழுது சுவையான 'காராமணிக்காய் பொரியல்' தயார்.

இதனை சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்.

Tags:    

Similar News