சமையல்

சூடான இட்லிக்கு சுள்ளுன்னு காரமா கடப்பா சட்னி செய்யலாமா?

Update: 2023-03-25 06:12 GMT
  • இந்த சட்னி 2 ,3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
  • இந்த சட்னி செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 75 கிராம்

தக்காளி - 2

பூண்டு - 6 பற்கள்

வர மிளகாய்- 12

புளி - எலுமிச்சை அளவு

கடுகு - 1/4 ஸ்பூன்

பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து

நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.

தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

மிக்சி ஜாரில் வெங்காயம், பூண்டு, மிளகாய் ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கொரகொரவென அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதே ஜாரில் பழுத்த தக்காளியுடன் புளியையும் சேர்த்து அதனை அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின் அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கி விட வேண்டும்.

அடுத்தாக அதில் தக்காளி பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும். சட்னியின் காரத் தன்மை போகும் வரை அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.

சட்னியில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைத்து விட்டு, பின் அடுப்பில் இருந்து இறக்கினால் சட்னி ரெடி!

சுட சுட இட்லிக்கு இந்த கடப்பா சட்னி வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்! இந்த சட்னி 2 ,3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

Tags:    

Similar News