சமையல்

ஹெல்த்தியான ஓட்ஸ் இட்லி

Published On 2023-10-27 09:47 GMT   |   Update On 2023-10-27 09:47 GMT
  • டயட் ஃபாளோ பண்றவங்க இதை கண்டிப்பாக உங்களது லிஸ்டில் சேர்க்கலாம்.
  • கொலஸ்ட்ரால் சேமிப்பைத் தவிர்க்கும்.

ஓட்சில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட், ரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் சேமிப்பைத் தவிர்க்கும். கொழுப்பு சேர்ந்தவர்களுக்கு அதைக் குறைப்பதற்கு கோதுமை ரவை ஒரு வரப்பிரசாதமாகும். இன்றைக்கு ஒரு ஹெல்த்தியான ஓட்ஸ் இட்லி மிருதுவாகவும், பஞ்சுபோலவும் சுவையாக எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

ஓட்ஸ்- ஒரு கப்

கோதுமை ரவை- ஒரு கப்

தயிர்- ஒரு கப்

கடலைபருப்பு- ஒரு ஸ்பூன்

பச்சைமிளகாய்- 1 (நறுக்கியது)

கடுகு- கால் டீஸ்பூன்

சிரகம்- கால் டீஸ்புன்

உளுந்தப்பருப்பு- கால் டீஸ்பூன்

கேரட்- 1 துருவியது

முந்திரி- 2 ஸ்பூன்

இஞ்சி- கால் ஸ்பூன்

சோடா உப்பு

செய்முறை:

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து மிதமான தீயில் ஓட்சை போட்டு வறுக்க வேண்டும். அதில் கோதுமை ரவையையும் சேர்த்து வறுத்து எடுத்து வேறு ஒரு பிளேட்டிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.

அதன்பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம், உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். இதில் நறுக்கிய பச்சைமிளகாய், கேரட், இஞ்சி, முந்திரி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள ஓட்ஸ், கோதுமை ரவையை இதில் சேர்க்க வேண்டும். அதில் தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் சோடா உப்பு சேர்த்து 30 நிமிடங்கள் மூடி போட்டு வைக்க வேண்டும். அதன்பிறகு இந்த கலவையை இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேகவைத்து எடுத்தால் ஓட்ஸ் இட்லி தயார்.

Tags:    

Similar News