சமையல்

நெல்லிக்காய் கொத்தமல்லி சட்னி

Published On 2023-02-21 06:06 GMT   |   Update On 2023-02-21 06:06 GMT
  • நெல்லிக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்.
  • கொத்தமல்லியை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் வாயு பிரச்சனை தீரும்.

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய் - 10

கொத்தமல்லித்தழை - 1 கப்

கறிவேப்பிலை - ¼ கப்

பச்சை மிளகாய் - 7

இஞ்சி - சிறு துண்டு

சீரகம் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

தேங்காய் - சிறு துண்டு

கடுகு - ½ டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

நெல்லிக்காயை சுத்தம் செய்து கொட்டைகள் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

வாணலியில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தேங்காய், இஞ்சி, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்க்கவும். மிதமான தீயில் நன்றாக வதக்கிய பின்பு அடுப்பை அணைக்கவும்.

பிறகு அதில் நெல்லிக்காய் மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து கலக்கவும்.

கலவை ஆறியதும் பசை போல அரைத்துக்கொள்ளவும்.

கடைசியாக உப்பு சேர்த்துக் கலக்கவும்.

மற்றொரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகைப் போட்டு தாளிக்கவும்.

இதை, தயாரித்து வைத்திருக்கும் கலவையில் கொட்டிக் கிளறவும். இப்போது 'நெல்லிக்காய் கொத்தமல்லி சட்னி' தயார்.

Tags:    

Similar News