சமையல்

நாக்கில் வைத்தவுடன் கரைந்துவிடும் இளநீர் அல்வா

Published On 2024-02-09 10:01 GMT   |   Update On 2024-02-09 10:01 GMT
  • உஷ்ணத்தை தணிப்பதற்கு மிகவும் உதவியாக இருப்பது இளநீர்.
  • வித்தியாசமாக இளநீர் அல்வா செய்யலாம் வாங்க.

உடல் உஷ்ணத்தை தணிப்பதற்கு மிகவும் உதவியாக இருப்பது இளநீர். இந்த இளநீரை வைத்து பலர் இளநீர் பாயாசம், இளநீர் சர்பத் போன்றவற்றை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். அதுமட்டுமில்லாமல் இதுவரை நீங்கள் எத்தனையோ அல்வாவை சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இளநீர் அல்வா செய்யலாம் வாங்க. இது பார்ப்பதற்கு கிளாசியா இருப்பது மட்டுல்ல சுவைப்பதற்கு சூப்பராக இருக்கும். நாக்கில் வைத்தவுடன் கரைந்துவிடும் அளவிற்கு சுவையாக இருகும் இந்த இளநீர் அல்வா.

தேவையான பொருட்கள்:

இளநீர்- 1

கார்ன்பிளார் மாவு- ஒரு கப்

சர்க்கரை- அரை கப்

ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன்

முந்திரி, பாதாம்- 10

செய்முறை:

ஒரு பவுலில் இளநீரின் தண்ணீரை ஊற்றி அதில் கான்பிளார் மாவினை கட்டி இல்லாமல் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் முந்திரி, பாதாம் துண்டுகளை போட்டு வறுத்து எடுத்து தனியே வைத்துக்கொள்ள வேண்டும்.

அதன்பிறகு மீண்டும் அதே வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி அதில் நாம் ஏற்கனவே கரைத்து வைத்துள்ள இளநீர் கலவையினை ஊற்ற வேண்டும். இதனை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இந்த கலவை சிறிது கெட்டியாக ஆரம்பித்தவுடன் அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கிளற வேண்டும்.

பின்னர் இளநீர் துண்டுகளில் உள்ள வலுக்கைகளை சிறிது சிறிதாக பொடித்து அந்த அல்வாவில் சேர்க்க வேண்டும். இளநீர் அல்வா கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி, பாதாம் மற்று சிறிதளவு நெய் சேர்த்து கிளறி இறக்கலாம்.

அல்வா சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். கண்டிப்பாக இளநீர் பிரியர்களுக்கு ஃபேவரட் அல்வாவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Tags:    

Similar News